அமெரிக்காவை வீழ்த்திய துருக்கி – 3-2 திரில் வெற்றி!

 


2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில், Turkey அணி 3-2 என்ற கோல் கணக்கில் United States அணியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டி இன்று காலை 7.30 மணிக்கு Los Angeles நகரில் நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடியான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.

ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஆஸ்டன் ட்ரஸ்டி கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

பின்னடைவை சந்தித்த துருக்கி விரைவில் பதிலடி கொடுத்தது. 10-வது நிமிடத்தில் அர்தா குலர் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.

அதன்பின் 31-வது நிமிடத்தில் ஓர்குன் கோக்சு கோல் அடித்து துருக்கியை 2-1 என முன்னிலைப்படுத்தினார். முதல் பாதி முடிவில் துருக்கி ஒரு கோல் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அமெரிக்கா, செபாஸ்டியன் பெர்ஹால்டர் கோல் மூலம் ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், கடைசி நேரத்தில் துருக்கி வீரர் கான் அய்ஹான் கோல் அடித்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தார்.

இதற்கிடையில், அதே பிரிவின் மற்றொரு லீக் போட்டியில் Australia மற்றும் Paraguay அணிகள் மோதிய போட்டி கோல் எதுவும் இன்றி சமநிலையில் முடிவடைந்தது.