‘பாகுபலி’ மீண்டும் வருகிறதா?



 எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான அதிபிரமாண்ட வரலாற்று புனைவு திரைப்படம் Baahubali: The Beginning மற்றும் அதன் தொடர்ச்சி 2017 இல் வெளியான Baahubali 2: The Conclusion ஆகியவை இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படைப்புகளாகக் கருதப்படுகின்றன.

Prabhas, Rana Daggubati, Anushka Shetty, Tamannaah Bhatia, Ramya Krishnan மற்றும் Sathyaraj ஆகியோரின் கதாபாத்திரங்கள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பான் இந்தியா படமாக வெளியான இந்த இரண்டு பாகங்களும் சுமார் ரூ. 2,500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தன. பின்னர் 2025 இல் முதல் இரண்டு பாகங்களையும் இணைத்து Baahubali: The Epic என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது Netflix தளத்தில் “Baahubali – The Torchbearer” என்ற புதிய ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் படப்பிடிப்பு அனுபவங்கள், கலைஞர்களின் நினைவுகள் மற்றும் படத்தின் உருவாக்க சவால்கள் குறித்து குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

இதில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி மற்றும் ராணா டகுபதி ஒரே காட்சியில் பேசும் ஒரு கிளிப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்தக் காட்சியில் ராணா டகுபதி “உலகம் இன்னும் அதற்கு தயாராகவில்லை…” என்று கூறி பாகுபலியின் தொடர்ச்சி குறித்து சஸ்பென்ஸ் ஏற்படுத்த, பிரபாஸ் சிரித்தபடி ஒரு சைகை காட்டுகிறார். இதனைப் பார்த்து குழுவினர் சிரிக்கும் அந்த தருணம் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த கிளிப் காரணமாக “பாகுபலி 3 வருகிறதா?” என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் ராஜமௌலியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். தற்போது அவர் மகேஷ் பாபுவை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் “வாரணாசி” என்ற புதிய திரைப்படத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.