பல கட்டங்களாக சுத்திகரிக்கப்பட்ட கோமியம் அடங்கிய ஆயுர்வேத கலவை, சிக்குன்குனியா வைரஸுக்கு எதிராக செயல்படக்கூடிய தன்மை கொண்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிக்குன்குனியா என்பது ஏடிஎஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவும் வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 7 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். இதில் கடுமையான மூட்டு வலி, காய்ச்சல், தலைவலி, தசை வலி, தோல் தடிப்புகள் மற்றும் அதிக சோர்வு போன்றவை ஏற்படுகின்றன.
தற்போது இந்த வைரஸை நேரடியாக அழிக்கும் சிறப்பு மருந்துகள் இல்லாததால், அறிகுறிகளை குறைக்கும் சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரூர்கே ஐ.ஐ.டி.யின் உயிரி அறிவியல் மற்றும் உயிரி பொறியியல் துறை பேராசிரியர் ஷைலி தோமர் தலைமையிலான குழு, ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொண்ட ஆய்வில் இந்த ஆயுர்வேத கலவை வைரஸ் எதிர்ப்பு செயல்பாடு கொண்டதாக உறுதி செய்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு சிக்குன்குனியா சிகிச்சை மற்றும் தடுப்பு ஆராய்ச்சியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
