பராகுவே அணி வெற்றி: 2026 உலகக் கிண்ணத்தில் ஜெர்மனி வெளியேறியது.

 


2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் (Knockout Stage) பராகுவே அணியிடம் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, உலகத் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பராகுவே அணி சார்பில் ஜூலியோ என்சிசோ (Julio Enciso) ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றார். அதனைத் தொடர்ந்து 54ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அணி சார்பில் கை ஹாவர்ட்ஸ் (Kai Havertz) கோல் அடித்து சமநிலை ஏற்படுத்தினார்.

90 நிமிட நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் வெற்றி கோலைப் பெற முடியாததால், போட்டி மேலதிக நேரத்திற்கு (Extra Time) சென்றது. ஆனால் அந்த நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் (Penalty Shootout) நடத்தப்பட்டது. இதில் பராகுவே அணி 5 வாய்ப்புகளில் 4 கோல்களை வெற்றிகரமாக அடித்தது. ஜெர்மனி அணி 5 வாய்ப்புகளில் 3 கோல்களையே பதிவு செய்தது.

இதன் மூலம் பராகுவே அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஜெர்மனி அணி உலகக் கிண்ணத்திலிருந்து அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறியுள்ளது.