இலங்கையின் புதிய சக்தி வாகனச் சந்தையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், உலகின் முன்னணி புதிய சக்தி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான BYD, தனது இலங்கை அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) உடன் இணைந்து, 11ஆவது காட்சியறையை நீர்கொழும்பில் திறந்துள்ளது.
புதிய காட்சியறை கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி, நீர்கொழும்பு – சிலாபம் வீதி, இலக்கம் 254 என்ற முகவரியில் திறந்து வைக்கப்பட்டது. இது கொழும்பு, காலி, குருநாகல், கண்டி, அம்பாறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் விரிவடைந்து வரும் BYD-யின் விற்பனை மற்றும் சேவை வலையமைப்புடன் இணைகிறது.
மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் BYD-யின் இருப்பை மேலும் விரிவுபடுத்தும் இந்த புதிய காட்சியறை, நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மின்சார மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களை அணுகுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
BYD-யின் ஏனைய விற்பனை நிலையங்களில் வழங்கப்படும் வாகனங்கள், விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றை நீர்கொழும்பு வாடிக்கையாளர்களும் பெற்றுக்கொள்ள முடியும். ஆரம்ப கட்டத்தில் காட்சியறையாக இயங்கும் இந்த நிலையத்தை, விற்பனை, பராமரிப்பு சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் முழுமையான 3S நிலையமாக மேம்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த காட்சியறையில் BYD SEALION 5, SEALION 6, SEALION 8, ATTO 1, ATTO 2, SHARK 6 மற்றும் DOLPHIN உள்ளிட்ட BYD-யின் பல்வேறு புதிய சக்தி வாகன மாதிரிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன, BYD-யின் 11ஆவது காட்சியறை திறப்பு இலங்கையில் நிறுவனத்தின் விரிவாக்கத்தில் முக்கியமான மைல்கல் எனத் தெரிவித்துள்ளார்.
“மிகக் குறுகிய காலத்தில், புதிய சக்தி வாகனங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து, அவை இலங்கை வாடிக்கையாளர்களிடையே பரிச்சயமான தேர்வாக மாறியுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள வாடிக்கையாளர்கள் புதிய சக்தி வாகனங்களுக்கு நம்பிக்கையுடன் மாறுவதற்கு தேவையான விற்பனை வலையமைப்பு மற்றும் ஆதரவு உட்கட்டமைப்புகளை தொடர்ந்து உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக Keells நிறுவனம் நாடளாவிய ரீதியில் 43 சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது.
மேலும், GreenEV நிறுவனத்துடனான BYD-யின் சமீபத்திய மூலோபாய கூட்டாண்மையின் ஊடாக மேலும் 73 சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் கிடைக்கும் பொது சார்ஜிங் நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், BYD மற்றும் Denza வாடிக்கையாளர்களுக்கு ஹோம் சார்ஜர் வழங்கப்படுவதால், வீட்டிலேயே தங்களது வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் கிடைக்கிறது.
நீர்கொழும்பில் 11ஆவது காட்சியறையை திறந்துள்ளதன் மூலம், இலங்கையில் தனது சில்லறை விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை BYD மேலும் விரிவுபடுத்தியுள்ளது. தற்போது மேல், தென், மத்திய, வடமேல், கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் BYD-யின் காட்சியறைகள் மற்றும் சேவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விரிவாக்கத்தின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு BYD-யின் புதிய சக்தி வாகனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கின்றன.
