வெள்ளை மாளிகை தாக்குதல் திட்டம் முறியடிப்பு – FBI நடவடிக்கை.

 


அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்த திட்டமிடப்பட்டிருந்த கொடூரத் தாக்குதல்களை அமெரிக்காவின் FBI (எஃப்.பி.ஐ) பாதுகாப்புப் பிரிவு முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்றிருக்க வேண்டிய தற்காப்புக் கலை போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் நிகழ்விற்கு வருகை தரும் பெருந்திரளான மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், தாக்குதல் முன்னதாகவே அந்த திட்டத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.

அதே நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80-வது பிறந்தநாள் கொண்டாட்டமும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த தாக்குதல் திட்டத்தின் இலக்குகளில் உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் தொழிலதிபர் இலோன் மஸ்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்கள் அனைவரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.