உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் 13 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தற்காலிக நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (17) காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இக்காலப்பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
.jpeg)