2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் ‘ஜே’ லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டீனா அணி அல்ஜீரியாவை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அர்ஜென்டீனா அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
பின்னர் பதிலடி முயற்சியில் இறங்கிய அல்ஜீரியா அணியால் அர்ஜென்டீனாவின் உறுதியான தடுப்பாட்டத்தை கடக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் மேலும் தீவிரமாக விளையாடிய மெஸ்ஸி, 60-வது மற்றும் 76-வது நிமிடங்களில் தொடர்ச்சியாக கோல்களை அடித்து தனது ஹெட்ரிக் சாதனையை பதிவு செய்தார்.
இறுதியில் 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டீனா அணி, 3 புள்ளிகளுடன் தனது குழுவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மெஸ்ஸியின் அபார ஹெட்ரிக் ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
