ஊவா மாகாணத்தில் குழந்தைகளில் மந்த போசணை அதிகம் – மருத்துவ எச்சரிக்கை.

 


இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே மந்த போசணை (Malnutrition) அதிகமாகக் காணப்படும் மாகாணமாக ஊவா மாகாணம் இருப்பதாக பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (10) பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற போசணை விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊவா மாகாணத்தில் மந்த போசணை மட்டுமன்றி, அதிபோசணை (Overnutrition) அதாவது அதிக உடல் எடை பிரச்சினையும் அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கான முக்கிய காரணமாக மக்களின் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதே அமைந்துள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.