டித்வா புயலுக்கு எதிரான போதிய தயார்படுத்தல்கள் இல்லை என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை ஆராய்வதற்காக கடந்த ஜனவரி 21 ஆம் திகதி விசேட பாராளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அந்த குழு அறிவித்துள்ளது.
இதையடுத்து, பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் 102 இன் கீழ், அந்த விசேட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும் காலத்தை செப்டம்பர் 19 வரை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
.jpeg)