அமெரிக்கா–ஈரான் போர் முடிவுக்கு நெருங்குகிறது – உலக நாடுகள் கவனம்

 அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடப்படும் என சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளார். இது தமது இராணுவத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்ற நிலைகளுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்திற்கான ஆரம்ப இணக்கப்பாடுகளை அறிவித்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமைதியும் பாதுகாப்பும் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடிய நிலையும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஈரானின் பொருளாதார மீட்புக்கும் இது உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்த உடன்படிக்கை அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தும் வகையில் அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.