இன்றைய ராசிபலன் (05): 12 ராசிகளுக்கான முழு பலன்கள்.



 இன்று (05) மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சித்த யோகம் நிலவுகின்ற இந்நாளில் புதன் பகவானின் அருளும், கடக ராசியில் குருவின் சஞ்சாரமும் பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, மிதுனம் மற்றும் கடகம் ராசியினருக்கு சந்திராஷ்டமம் காணப்படுகின்றது. திருவோண விரத நாளான இன்றைய தினத்திற்கான 12 ராசிகளின் பலன்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

மேஷம்: வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுசரித்து செல்லுதல் நல்லது. மனஅமைதி கிடைக்கும்.

ரிஷபம்: பணியில் முயற்சிக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வார்த்தைகளில் கவனம் அவசியம்.

மிதுனம்: புதிய முயற்சிகள் சாதகமல்ல. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பணியில் சற்று சிரமங்கள் ஏற்படலாம்.

கடகம்: புதிய திட்டங்கள் முன்னேற்றம் தரும். நிதி உதவி கிடைக்கும். பணியிடத்தில் தலைமைப் பண்பு வெளிப்படும்.

சிம்மம்: வெளியூர் பயணம் வாய்ப்பு. திடீர் செலவுகள் ஏற்படலாம். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும்.

கன்னி: திட்டமிட்ட செயல்கள் வெற்றி தரும். கல்வி முயற்சிகள் சாதகமாகும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கலாம்.

துலாம்: ஆன்மீக பயணம் வாய்ப்பு. குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானம் அவசியம்.

விருச்சிகம்: வேலை முறையில் மாற்றம் தேவைப்படலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும்.

தனுசு: குடும்பத்தில் உடல்நலப் பிரச்சனை காரணமாக கவலை ஏற்படலாம். செலவுகளில் கவனம் தேவை. வேலை முன்னேற்றம் உண்டு.

மகரம்: உடல்நலம் மேம்படும். நேர்மறை சிந்தனை முக்கியம். நல்ல செய்திகள் கிடைக்கும். கலைத்திறன் பாராட்டு பெறும்.

கும்பம்: பணியிட சூழல் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்கள் வெற்றி தரும்.

மீனம்: மனஅழுத்தம் மற்றும் சோர்வு ஏற்படலாம். குடும்பத்தில் சவால்கள் இருக்கும். பெரியோரின் ஆதரவு உதவும்.