சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பை அனிருத் மேற்கொண்டுள்ளார்.
கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம் சென்சார் பிரச்சனைகளால் தாமதமடைந்தது. பின்னர் படம் இணையத்தில் கசிந்ததால் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், படத்தின் எடிட்டிங் குழுவில் இருந்த ஒருவரால் தகவல் கசிந்தது என தெரியவந்துள்ளது.
இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)