தம்புத்தேகம யாய 5 பகுதியில் சந்தேகத்திற்கிடமான மரணம் – பொலிஸார் விசாரணை ஆரம்பம்.



தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யாய 05, ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தம்புத்தேகம பொலிஸார் சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.