தென்னை விவசாய பாதுகாப்புக்கு புதிய காப்புறுதி திட்டம்

 லங்கையில் புதிய தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தென்னம்பிள்ளைகளுக்கான புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், வறட்சி, வெள்ளம், அதிக மழை, சூறாவளி, மண்சரிவு மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல் போன்ற இயற்கை அனர்த்தங்களால் தென்னை பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தென்னம்பிள்ளைக்கு ரூ.40 கா
ப்புறுதி வாரிக் கட்டணமாக செலுத்துவதன் மூலம் வருடாந்தம் ரூ.550 வரை காப்புறுதி இழப்பீடு பெற முடியும் என சபை குறிப்பிட்டுள்ளது. மேலும், அதிகபட்ச காப்புறுதி காலமான ஆறு ஆண்டுகளுக்கு ரூ.875 வாரிக் கட்டணத்தின் அடிப்படையில் ஒரு தென்னம்பிள்ளைக்கு வருடாந்தம் ரூ.12,450 வரை இழப்பீடு பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காட்டு யானைகளின் தாக்குதலால் விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டங்களை குறைத்து, தென்னை பயிர்ச்செய்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதாகும்.

இந்த காப்புறுதித் திட்டம் மூலம், தென்னை விவசாயிகள் தங்கள் பயிர்ச்செய்கையை நம்பிக்கையுடன் மற்றும் பாதுகாப்பாக முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.