சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை


 சமீபத்திய தரவுகளின்படி, நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். குறிப்பாக மேல் மாகாணம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவிலான அதிஅபாய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பதிவாகியுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை எல்லை, மகரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொட உயன மற்றும் கோட்டடுவ உள்ளிட்ட பகுதிகள் அதிஅபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, சீதுவ, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர பகுதிகள் அதிக அபாய பகுதிகளாக உள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வத்தேகம, களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அதிஅபாய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், டெங்கு கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.