இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட ஓரளவு பலத்த மழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையாக மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளிலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு காணப்படுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் மின்னல் தாக்கம் மற்றும் திடீர் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
