இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி.



 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (3) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாகவும், விற்பனை விலை 337.97 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (02) வெளியிடப்பட்ட விகிதங்களுடன் ஒப்பிடுகையில், டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.60 ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று மேலும் குறைந்துள்ளதாக தெரிய வருகிறது.