நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததைத் தொடர்ந்து, முதலாம் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் சார்பில் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 120 ஓட்டங்கள் குவித்து அணியின் மொத்த எண்ணிக்கையை வலுப்படுத்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜஸ்டின் கிரேவ்ஸ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நேற்றைய ஆட்டத்தின் இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருந்தாலும் ஓட்டம் எதையும் பெறாமல் இருந்தது. இந்நிலையில், போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
