மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் உள்ளிட்ட வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையானதும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையானதும் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும், நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
