வாகன இறக்குமதி செலவில் பெரும் உயர்வு: முதல் காலாண்டில் 900% அதிகரிப்பு.

 


மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 6,233 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் தனியார் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள் இரண்டும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் அதே காலாண்டில் வாகன இறக்குமதி செலவு சுமார் 900 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால், நாட்டின் வாகன இறக்குமதி சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.