சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் Dushani Thaparaera இதனை தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, மே மாதத்தில் மாத்திரம் 8,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் பதிவாகும் மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தென் மாகாணத்தில் 16 சதவீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 9 சதவீதமும் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் 72 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது விளக்கத்தின் படி, இதுவரை 33,572 நோயாளர்களும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. ஆண்டின் ஆரம்ப ஆறு மாதங்களுக்குள் இத்தகைய அதிகளவான நோயாளர்கள் பதிவாகியிருப்பது கவலைக்கிடமான நிலைமையாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
.jpeg)