இலங்கையில் வறுமைக் கோடு உயர்வு: ஒருவருக்கான மாதச் செலவு ரூ.17,117 ஆக அதிகரிப்பு.

 


அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு தனிநபருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்காக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, இந்த மதிப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 427 ரூபாவினால் உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு 16,690 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இந்த வறுமைக் கோடு என்பது ஒரு நபரின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான குறைந்தபட்ச மாதச் செலவைக் கணக்கிடும் அளவுகோலாகும்.

ஏப்ரல் மாதத்தில் மாவட்ட அடிப்படையில் பார்த்தால், அதிகபட்ச வறுமைக் கோடு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி, அது 18,461 ரூபாவாக இருந்தது.

அதேவேளை, குறைந்தபட்ச வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகி, அது 16,367 ரூபாவாக இருந்ததாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.