சுற்றுலாத்துறை வளர்ச்சி; இலங்கைக்கு வெளிநாட்டு வருகை உயர்வு.



 இலங்கைக்கு மே மாதத்தில் மட்டும் 145,745 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 132,919 வருகையுடன் ஒப்பிடுகையில் 9.65 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.

மேலும், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 129,466 வருகையுடன் ஒப்பிடுகையில் இது 12.6 சதவீத உயர்வாகவும் பதிவாகியுள்ளது.

புதிய புள்ளிவிவரங்களின்படி, மே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் 60,342 பேர் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த வருகையின் 41 சதவீதமாகும்.

அத்துடன், பிற பல நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.