ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற ராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின்னர், குறித்த மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராஜதந்திர நடவடிக்கையின் மூலம் விடுவிக்க வேண்டுமென இந்திய பிரதமரை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை முன்வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இன்று (02) சென்னையை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற ராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின்னர், குறித்த மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராஜதந்திர நடவடிக்கையின் மூலம் விடுவிக்க வேண்டுமென இந்திய பிரதமரை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை முன்வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.