அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சிறிய வீழ்ச்சி – மத்திய வங்கி அறிவிப்பு.



 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (22) சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 329.30 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதி 339.06 ரூபாவாக காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்துடன் ஒப்பிடுகையில், டொலரின் கொள்முதல் பெறுமதி 328.85 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 338.70 ரூபாவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ரூபாய் மதிப்பு சிறியளவில் சரிவை பதிவு செய்துள்ளதாக பொருளாதார தரவுகள் தெரிவிக்கின்றன.