கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடமிருந்து 3.94 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 215 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 600,000 ரூபாய் பணமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.