நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெலிஸ்ஸகல மற்றும் ஹுனுகல் ஓயா பகுதிகளில் இந்த அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நுவரெலியாவின் வட்டவளை பகுதியில் 82 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், கேகாலை மாவட்டத்தில் 70 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், இரத்தினபுரி மாவட்டத்தின் எரத்த பகுதியில் 62 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடன், மத்திய மலைநாடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
