உக்ரைன்–ரஷ்யா தலைவர்கள் சந்திப்பு குறித்து ட்ரம்ப் கருத்து.




 உக்ரைன்–ரஷ்யா போருக்கு தீர்வு காணும் நோக்கில், தமக்கும் ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin அவர்களுக்கும் இடையில் நேருக்கு நேர் சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில், ஐரோப்பாவில் நடைபெற்று வரும் போரின் மீதான சர்வதேச கவனம் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பும் வரை காத்திருப்பது பொருத்தமானதல்ல என ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான நேரடி கலந்துரையாடல்களின் மூலமே நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலப்பகுதியில் முழுமையான போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்த முன்மொழிவை ரஷ்ய ஜனாதிபதி புடின் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்த முன்னேற்றமாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஷெலென்ஸ்கியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்திய Kremlin, அதன் உள்ளடக்கம் தொடர்பில் புடினுக்கு விளக்கமளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.