முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைகளுடன் கலந்துரையாடி இறுதி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் புதிய தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறும் பாதுகாவலர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில முதியோர் இல்லங்கள் உயர்தர சேவைகளை வழங்கி வந்தாலும், சில இடங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான பணியாளர்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தரமற்ற நிறுவனங்களை எதிர்காலத்தில் செயல்பட அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதற்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதாகவும், அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 3 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)