கொழும்பு புறநகர் பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை.



 கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை பகுதியில் இருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஏற்பட்ட இந்த கோளாறினால், பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (05) இரவு 8.00 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதன்படி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.