ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பஸ் கட்டண திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இக்கோரிக்கை நேற்று (24) எழுத்துப்பூர்வமாக கையளிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அடுத்த ஐந்து நாட்களுக்குள் கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, ஆண்டுதோறும் நடைபெறும் பஸ் கட்டண திருத்தம் ஜூலை 1 ஆம் திகதி அமுல்படுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் எரிபொருள் விலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி ஒப்புதலுடன் கட்டண திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனும் விரைவில் கலந்துரையாடல் நடத்த முயற்சி நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டுக்கான பஸ் கட்டண திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
.jpeg)