வங்கி பாதுகாப்பு பெட்டகம் உடைத்து தங்க நகைகள் கொள்ளை – பொலிஸார் விசாரணை.



, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் மூன்று பேர் இணைந்து பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பெருமளவிலான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (23) அதிகாலை சுமார் 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த இக்குழுவினர், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துள்ளனர். பின்னர் வங்கியின் பின்புறத்தில் உள்ள குளியலறை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்துள்ளனர்.

அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு, மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுவரை சந்தேகநபர்கள் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.