கொக்குவில்–பனிச்சையடி வீதியில் மோட்டார் சைக்கிள்–முச்சக்கர வண்டி மோதல்: ஒருவர் உயிரிழப்பு.

 


கொக்குவில் பனிச்சையடி–கொக்குவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திராய்மடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஏ9 வீதியில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டு வளாகத்திற்கு அருகில் மற்றொரு விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முயன்ற பாதசாரியுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் என மூவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயதுடைய பாதசாரி பின்னர் உயிரிழந்துள்ளார்.