ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி! – அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயம் மேலும் பலவீனம்.

 


இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான வகையில் இன்றும் (5) தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அதன் விற்பனை விலை 342 ரூபாயாக காணப்படுவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த தொடர்ச்சியான மாற்றம், இறக்குமதி செலவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.