சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (10) காலை ஆரம்பமாகியுள்ளன.



 சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (10) காலை ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலின்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம், நிதி (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.