ஜூன் 20 முதல் ஆசனப்பட்டி சட்டம் கட்டாயம் – தேசிய வீதி பாதுகாப்பு சபை.

 


எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி முதல் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன்பக்கமும் பின்பக்கமும் உள்ள பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விதி ஏற்கனவே அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சலுகைக்காலம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, ஜூன் 20 முதல் நாடு முழுவதும் கடுமையாக இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது.