அதேவேளை, உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேல் நீதிமன்ற உத்தரவின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2015 மே 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த புங்குடுதீவு மாணவி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ட்ரயல்-அட்-பார் (Trial-at-Bar) தீர்ப்பாயம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர் இவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.
மேன்முறையீட்டு தீர்ப்பில், இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், ஏனைய ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவரது மரண தண்டனை கைதி சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
மேலும், மற்றொருவர் அண்மையில் சிறையில் உயிரை மாய்த்துக்கொண்டதால், வழக்கு நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள மூன்று மரண தண்டனை கைதிகளுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வாசித்து உறுதிப்படுத்தப்பட்டது.
அதேநேரம், விடுவிக்கப்பட்ட இரு நபர்களின் விடுதலையும் நீதிமன்றத்தால் மீண்டும் உறுதியாக்கப்பட்டது.
.jpeg)