அமெரிக்க நேரப்படி காலை 11:20 மணியளவில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
விபத்துக்குள்ளான B-52 Stratofortress விமானம், 1950களிலிருந்து அமெரிக்க விமானப்படையில் சேவையில் உள்ள நீண்ட தூர மூலோபாய குண்டுவீச்சு விமானமாகும். சுமார் 8,800 மைல்கள் தூரம் பயணிக்கும் திறன் கொண்ட இந்த விமானம், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டதாகக் கருதப்படுகிறது.
வியட்நாம் போர், வளைகுடாப் போர், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் அண்மைய மத்திய கிழக்கு இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய போர் நடவடிக்கைகளில் B-52 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
.jpeg)