போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நோர்வே அணிக்காக நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் 29 மற்றும் 43-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஈராக் அணியின் சார்பில் அய்மென் ஹுசைன் 39-வது நிமிடத்தில் கோல் அடித்து பதிலடி கொடுத்தாலும், அது அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வர போதுமானதாக அமையவில்லை.
இரண்டாம் பாதியில் நோர்வே வீரர் லியோ ஆஸ்டிகார்ட் 76-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தின் (90+6') போது ஈராக் வீரர் அய்மென் ஹுசைன் துரதிர்ஷ்டவசமாக அடித்த சுயகோல், நோர்வே அணியின் வெற்றியை 4-1 என உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி 3 புள்ளிகளுடன் குரூப் ‘I’ பிரிவில் தற்காலிகமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி செனகலை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளது.
.jpeg)