இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மாத்தறை மற்றும் பதிகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில், காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற ஒரு பேருந்தும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
