பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய தினத்துக்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை, நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையிலான விதிகளின் கீழ் பாராளுமன்ற அலுவல்கள் நடைபெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறுகின்றன.
11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் முன்வைக்கப்படவுள்ளன.
மதியம் 11.30 மணி முதல் 2.30 மணி வரை இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட கட்டளை அங்கீகாரத்திற்காக விவாதிக்கப்படவுள்ளது.
பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி அரசாங்கத்தின் சார்பில் இடம்பெறவுள்ளது.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பும் நடைபெற்று வருகின்றது.
.jpeg)