வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக மெஸ்ஸி.



 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி புதிய உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் கோல் ஒன்றைப் பதிவு செய்ததன் மூலம், உலகக் கிண்ணத் தொடர்களில் தனது மொத்த கோல் எண்ணிக்கையை 17 ஆக உயர்த்திய மெஸ்ஸி, ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஜெர்மனியின் முன்னாள் நட்சத்திர வீரர் மிரோஸ்லாவ் குளோசே வைத்திருந்த சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

மேலும், 2026 உலகக் கிண்ணத் தொடரில் மெஸ்ஸி பதிவு செய்த நான்காவது கோல் இதுவாகும். இந்த கோலின் மூலம் மகளிருக்கான உலகக் கிண்ண வரலாற்றில் 17 கோல்கள் அடித்துள்ள பிரேசிலின் புகழ்பெற்ற வீராங்கனை மார்டாவின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

உலகக் கிண்ண வரலாற்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளை இணைத்து பார்க்கும்போது, மார்டாவின் 17 கோல்கள் நீண்ட காலமாக சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை மெஸ்ஸியும் எட்டியுள்ளார்.