குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
குவைத் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுடன் சேர்த்து, இரண்டு குவைத் நாட்டவர்கள், ஒரு இந்தியர் மற்றும் மேலும் இரண்டு வெளிநாட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து ஹஷிஷ், ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அவற்றை அளவிடும் கருவிகள் மற்றும் பொதி செய்யும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குவைத் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
.jpeg)