காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இன் கீழ் 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெறும்.
11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.
மதியம் 11.30 மணி முதல் 1.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மற்றும் குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தல் தொடர்பான சட்ட கட்டளை அங்கீகாரம் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 1.30 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
அதன் நேரடி ஒளிபரப்பும் இன்று இடம்பெறுகிறது.
.jpeg)