இந்த நடவடிக்கையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (11) பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் முக்கியமான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.47% அதிகரித்து 95.40 டொலராக உயர்ந்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 2.89% அதிகரித்து 92.63 டொலராக பதிவாகியுள்ளது.
ஈரானின் கூட்டு இராணுவ தலைமையகம், ஹோர்முஸ் நீரிணையை அனைத்து வகை கப்பல் போக்குவரத்திற்கும் முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. அந்த பகுதியை கடக்க முயற்சிக்கும் எந்தக் கப்பலையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், வணிகக் கப்பல்கள் தற்போது அந்த கடல் வழியாக பாதுகாப்பாக பயணித்து வருவதாக அமெரிக்க இராணுவம் தனது X (Twitter) சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதாக செய்திகள் வெளியாகினாலும், தங்களது எந்தக் கப்பலுக்கும் சேதம் ஏற்படவில்லை என அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரலில் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்திற்குப் பிறகு, இந்த புதிய தாக்குதல்கள் மீண்டும் பெரிய அளவிலான போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
.jpeg)