கலஹாவில் முச்சக்கரவண்டி மீது பைனஸ் மரம் விழுந்து விபத்து.



 கண்டி – கலஹா பிரதான வீதியின் கலஹாகுரூப் பகுதியில், பைனஸ் மரம் ஒன்று முறிந்து முச்சக்கரவண்டி மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கலஹாவில் உள்ள சண்முகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது, தந்தை ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி மீது இந்த மரம் திடீரென முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பயணித்த தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். எனினும், முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதே பிரதான வீதியில் இதற்கு முன்பும் பேருந்து ஒன்றின் மீது மரம் விழுந்த சம்பவம் இடம்பெற்றிருந்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து, பிரதான வீதிக்கு அருகிலுள்ள ஆபத்தான மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.