ஜப்பானை உலுக்கிய 6.9 ரிக்டர் நிலநடுக்கம்.



 வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானிலும் இன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் இவாத்தே (Iwate) மாகாணத்தின் வடக்குப் பகுதிக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் மையப்புள்ளி சுமார் 50 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தோஹோகு ஷின்கான்சென் (Tohoku Shinkansen) அதிவேக ரயில் சேவைகள் உட்பட சில ரயில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மிகவும் நில அதிர்வு ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜப்பானில், இவ்வாறான நிலநடுக்கங்கள் அடிக்கடி பதிவாகுகின்றன. உலகளவில் ரிக்டர் அளவுகோலில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஜப்பானில் ஏற்படுவதாக புவியியல் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.