உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.

 


உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (25) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. இதன் விளைவாக, ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 75 அமெரிக்க டொலருக்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, WTI (West Texas Intermediate) வகை கச்சா எண்ணெயின் ஒரு பெரல் விலை 70.05 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் Brent வகை கச்சா எண்ணெயின் விலை ஒரு பெரலுக்கு 73.32 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

மேலும், Murban வகை கச்சா எண்ணெயின் விலை 4.57 சதவீதத்தால் குறைந்து, ஒரு பெரலுக்கு 66.45 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 68 முதல் 70 அமெரிக்க டொலர்களுக்கு இடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலைகளில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.