இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்.

 


ndonesiaவின் Sulawesi Island பகுதியில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று காலை (16) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குறித்து வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, Palu நகருக்கு தென்கிழக்கே சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசிய புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

உடனடி தகவல்களின் படி, உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான சொத்து சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.